அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !! //
சீமாச்சு இப்படி எழுதியிருப்பது பின் வரும் பல செய்திகளை நமக்குச் சொல்கிறது: 1. சீமாச்சுவோடு குடும்ப ரீதியில் தொடர்புடைய அரசியல்வாதிகள் 'பலர்' இருக்கிறார்கள். அவர்களோடு சீமாச்சு உற்சாக பானங்களைச் சாப்பிடும் பழக்கம் உண்டு. 2. அப்படிப் பழகும் அரசியல்வாதிகளில் குறிப்பிடத் தக்கவர்கள் (அல்லது ஒருவரேனும்) வருமான வரித் துறைக்குத் தெரியாத அளவில் பெருந்தொகையைக் கையாடி வைத்திருக்கிறார். சீமாச்சுவுக்கு இந்த அரசியல்வாதி எவ்வளவு தொகையை அமெரிக்காவில் வங்கியில் வைப்பீடு செய்யச் சொன்னார் என்ற தகவல் தெரியும். இந்தத் தொகை சீமாச்சுவே தெரிவித்திருப்பது போல ஒரு பெரிய பள்ளியைக் கட்டலாம் என்றால் அத்தொகை பல கோடிகளாக இருக்கும். 3. மேற்சொன்ன அரசியல்வாதியைப் போலப் பலரது வருமான வரித் தில்லுமுல்லுகள் சீனு என்ற சீமாச்சுவுக்குத் தெரியும். இப்படிப்பட்ட தொகைகள் மக்களது வரிப்பணம் என்பதால் இவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய வலைப்பதிவர்களுக்கும் உண்டு. சீமாச்சு நண்பர்களோடு உற்சாக பானம் அருந்திய பணத்தில் நம்முடைய வரிப்பணமும், ஏழைகளின் உழைப்பும் இரத்தமும் கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மேற்கண்ட காரணங்களுக்காக, சீமாச்சு என்ற பதிவரை இந்திய வருமான வரி அதிகாரிகள் உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலைப்பதிவர்கள் வற்புறுத்த வேண்டும். அல்லது சீமாச்சுவே இத்தகவல்களை தனது வலைப்பதிவில் வெளியிட வேண்டும்.
46 comments:
I totally agree with your views.
Seemachu blogger should tell, who is that MP, is it Mani sankara ayyar or OS Maniayn. These 2 have been only MP's of Mayiladudurai for last 10 years.
நான் வேணா சீமாச்சுவோட போன் நம்பர் / மின்மடல் முகவரி தர்றேன், அவர்கிட்ட கேட்டு நீங்க எழுதுங்களேன் எல்லா டீடெயிலும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//நான் வேணா சீமாச்சுவோட போன் நம்பர் / மின்மடல் முகவரி தர்றேன், அவர்கிட்ட கேட்டு நீங்க எழுதுங்களேன் எல்லா டீடெயிலும்.//
ஏனுங்க,உங்ககிட்ட இப்புடிக் கேக்கச் சொன்னாருங்களா? தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்பாங்களே, இதுதானுங்களா? இவ்வளவு அன்புடன் இருக்குற நீங்களே ஏனுங்க அவருகிட்ட கேட்டு எழுதக்குடாது? உங்க அன்பு சீமாச்சுக்கு மட்டும்தானுங்களா? ஒழுங்காக வரி செலுத்தும் இந்தியக் குடிமக்களுக்குக் கிடையாதுங்களா? :) உங்களை மாதிரி சப்(பை)போர்ட் நெட்வொர்க் எல்லாம் வேலைக்கு ஆவாதுங்கோ!
அட ராமா! அவருக்கு அதிகபட்ச உற்சாக பாணமே காப்பிதான். அவருக்கு எல்லா எம் எல் ஏ, எம் பி யும் தெரியும். ஒரு விளையாட்டுக்காக அப்படி எழுதினதுக்கு உங்களுக்கு விளம்பரம் வர வேண்டி இந்த கூத்து அடிக்கிறீங்களே. சீமாச்சு அண்ணனை பத்தி எதுவாவது தெரியுமா? சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேச கூடாது.
//Seemachu blogger should tell, who is that MP, is it Mani sankara ayyar or OS Maniayn. These 2 have been only MP's of Mayiladudurai for last 10 years.// நன்றி ராஜு. இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் இந்த மாதிரி அரசியல்வாதிங்களைக் கைக்குள்ள போட்டு வச்சிக்க வேண்டியது. அவனுங்க கையைக் காலை நக்கி இந்தியாவுல வேண்டியதைச் சாதிச்சுக்க வேண்டியது. அதே வேலையை அமெரிக்காவுலயும் வந்து செய்ய வேண்டியது. இந்திய மானம் போவுது. அவுருக்கு சப்போர்ட்டுக்கு பாஸ்டன் (அப்படின்னு சொல்லிக்கிட்டு)லேருந்து ஒருத்தரு. உங்களுக்கெல்லாம் உண்மையான ரோசமும், நாட்டு மேல அக்கறையும் இருந்தா அந்த அரசியல்வாதிங்க யாருங்கிறதை சொல்லுங்கடே!
// உங்களுக்கு விளம்பரம் வர வேண்டி இந்த கூத்து அடிக்கிறீங்களே. // ஏனுங்க, எனக்கும் உங்க சீமாச்சு அண்ணனுக்கும் எதுனா சொத்துத் தகராறுங்களா? அவுரு யாரோ நான் யாரோ. எனக்கு என்னத்துக்குங்க விளம்பரம்? அதுவும் இப்பிடி வருமான வரி மோசடி கேஸ்ல? அவுரு வெளாட்டுக்குச் சொல்லுறதா அவரே சொல்லலியே நீங்க எப்பிடிங்க சொல்லுறீங்க?
தம்பி! நீங்க பதிவு எழுத வந்து 2 மாசம் கூட முடியலை. அவரு 6,7 வருஷ சீனியர்.இங்க இருக்கும் எல்லாருக்கும் அவரை பத்தி தெரியும். அவரு மேல நீங்க கல் எரிஞ்சா திருப்பி அது உங்களை தான் தாக்கும். இன்னும் சொல்ல போனா மல்லாந்து படுத்துகிட்டு எச்சில் துப்புவது போல. சும்மா காமடி பீஸா ஆகாதீங்க!
/:) உங்களை மாதிரி சப்(பை)போர்ட் நெட்வொர்க் எல்லாம் வேலைக்கு ஆவாதுங்கோ//
:((
//தம்பி! நீங்க பதிவு எழுத வந்து 2 மாசம் கூட முடியலை. அவரு 6,7 வருஷ சீனியர்.// ஏனுங்க அபி அப்பா அண்ணா. சின்னப் பையனுங்க கேள்வி கேட்டா தப்புங்களா? தப்புன்னா யாரு செஞ்சாலும் தப்புதானுங்களே? 6,7 வருஷம் ப்ளாக் எழுதினா கொம்புங்களா? அவரு நியாயஸ்தன்னா, மக்கள் மேல அக்கறை இருந்தா, மக்கள் சொத்தைத் திங்கிறது யாருன்னு காட்டட்டுமேங்க. நல்லதுக்கு சப்போர்ட் பண்னினா சரிங்க, இதுக்குப் போயி என்னை மாதிரி சின்னப் பையனை மிரட்டுறீங்களே, ஞாயமுங்களா?
சின்ன பையன் கேள்வி கேட்டா தப்பில்லை. ஆனா அவரை பத்தி தெரிஞ்சுகிட்டு கேட்டிருக்கலாம். சரி அப்படியே அவரை விசாரிக்கனும்னா அதுக்கு அமரிக்கா பர்மிஷன் கொடுக்கனும். ஏன்னா அவரு அமரிக்க பிரஜை. அதனால அவரை விசாரிக்க வேண்டும் என்றால் அதுக்கு முன்னாடி டேவிட் ஹெட்லி எல்லாம் விசாரிச்சுட்டு வரிசைகிரமமா தான் இவர் கிட்ட வரனும். அதுக்கு 350 வருஷம் ஆகும்.
அதுக்கு பதிலா அந்த எம் எல் ஏ, எம் பி எல்லாரையும் விசாரிக்கலாம். தப்பே இல்லை. நீங்க தீவாளி கொண்டாடுங்க தம்பி!
ஏனுங்க, அவிங்களே எழுதியிருக்காங்க. அதைப் படிச்சுப் போட்டுத்தானுங்களே நான் கேக்குறேன். மெய்யாலுமே 350 வருசமாகுமா, இதே மாதிரி வரிசையாத்தான் கேஸ் ஒவ்வொன்னையும் பைசல் பண்ணுவீங்களா, கென்னடி கேசை முடிவுபண்ணிப்போட்டுதான் இந்தக் கேஸை எடுப்பீங்களா அப்படின்னு அவிங்க சார்லெட் மேயர் Anthony Foxx கிட்ட வேணா கேட்டுப் பார்க்கட்டுங்களா? //அதுக்கு பதிலா அந்த எம் எல் ஏ, எம் பி எல்லாரையும் விசாரிக்கலாம். தப்பே இல்லை.// நல்லா சொன்னீங்கோ. அதைத்தான் சீமாச்சு அண்ணன் சொல்லோணுமின்னு கேக்குறேனுங்க. அவிய குடிச்சது காபியாவே இருக்கட்டுமுங்க, ஆனா யாரு அந்த அரசியல் புள்ளி, சீமாச்சு அண்ணனுக்கு எவ்வளவு பணம் தாரேன்னு சொன்னாரு?
அ...கேட்க மறந்து போயிட்டேனுங்க அபி அப்பா, தீவாளி கொண்டாடுங்கன்னு ஏனுங்க மே மாசம் சொல்லுறீங்க?
எனக்காக wait பண்ணறதுக்கு, மயிலாடுதுறையிலே இருக்குற அரசியல்வாதி வீட்டுக்கெல்லாம் ஒரு ரவுண்டு போயி ரெய்ட் பண்ணச் சொல்லுங்க. நிறைய்ய விஷயம் கிடைக்கும்.
// சீமாச்சு நண்பர்களோடு உற்சாக பானம் அருந்திய பணத்தில் நம்முடைய வரிப்பணமும், ஏழைகளின் உழைப்பும் இரத்தமும் கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது//
இதெல்லாம் ரொமப் டூமச்சு... உங்கள் கற்பனைக்குதிரையைக் கட்டி அடக்கிக்கொள்ள வேண்டுகிறேன்.. ரொம்ப படம் போட வேண்டாம்..
//மயிலாடுதுறையிலே இருக்குற அரசியல்வாதி வீட்டுக்கெல்லாம் ஒரு ரவுண்டு போயி ரெய்ட் பண்ணச் சொல்லுங்க. நிறைய்ய விஷயம் கிடைக்கும்.// இவ்வளவு நம்பிக்கையாச் சொல்லுறீங்களே சீமாச்சு அண்ணா, அது எப்படி? இவ்வளவு சொல்லுற நீங்க அந்தப் பள்ளிக்கூடம்/பணம் பார்ட்டி யாருன்னு சொல்லிப்போடுங்க. லஞ்சம் ஒழியணும், இந்தியா உருப்படணும்னு ப்ளாக்குல எழுதிக்கிட்டு, இப்படி ப்ளாக் மணி பார்ட்டியைப் பாதுகாத்தா எப்படின்னே இந்தியா ஒளிரும்? சொல்லுங்க. நீங்க நியாயஸ்தன்னு அபி அப்பாவே சொல்லுறாரு. ஏன், சார்லட் மேயரே சொல்லுவாரு. ஆனா நீங்க ஒரு வரித் திருட்டு செய்யிற அரசியல்வாதியைக் காப்பாத்துறீங்களே, ஞாயமா? யோசிச்சுப் போட்டு சொல்லுங்கண்ணா.
\\\கருணாநிதி = 500 கோடி இந்திய ரூபாய்
ஜெயலலிதா = 450 கோடி இந்திய ரூபாய்
விஜயகாந்த் = 350 கோடி இந்திய ரூபாய்
வைகோ = 200 கோடி இலங்கை ரூபாய்
மணி சங்கர் = 100 கோடி இந்திய ரூபாய்
ஓ.எஸ். மணியன் = 50 கோடி இந்திய ரூபாய்
ராஜ் குமார் = 40 கோடி இந்திய ரூபாய்\\\
இதுதான் சீமாச்சுக்கிட்ட சொல்லப்பட்டது. ஸ்டார்ட் ஆக்ஷன். நடவடிக்கை எடுங்க அக்கினிச் சித்தரே.
//சீமாச்சு அண்ணனுக்கு எவ்வளவு பணம் தாரேன்னு சொன்னாரு?//
எனக்கு எங்கய்யா தர்றேன்னு சொன்னாரு? சொல்லியிருந்தாத்தான் கையோட வாங்கி எங்க பள்ளீக்கூடத்தைக் கட்டியிருக்க மாட்டேனா? ஏழைப் புள்ளங்க வசதியாப் படிக்காதா? அவரு பேருல அக்கவுண்ட் ஆரம்பிச்சி .. அவரு காசைப் போடறதுக்கு எனக்கு ஏங்க அவரு பணம் தர்றாரு...
அதெல்லாம் வுடுங்க.. அமெரிக்காவுல இருக்கீங்க. நம்ம நாட்டுமேல ரொம்பப் பாசமா இருக்கீங்க.. தமிழ் தமிழ்னு உயிரைவேற உடுறீங்க.. 4000 தமிழ்ப் பிள்ளைகள் இலவசமாப் படிக்கிறதுக்கு பள்ளிக்கூடம் கட்டிட்டிருக்கேன். உங்கள் மேலான ஆதரவைத் தருவீங்களா? உடனே எனக்கு நம்பர் அனுப்பவும்.. இப்பவேப் பேசலாம்..
மத்தபடி அரசியல் வாதிக்கிட்டே இருக்குற பணத்தை வாங்க்கிறது என்பது நம்ம நாட்டு சட்ட திட்டத்தைப் பொறுத்தவரை இயலாத ஒன்று... :(
//மத்தபடி அரசியல் வாதிக்கிட்டே இருக்குற பணத்தை வாங்க்கிறது என்பது நம்ம நாட்டு சட்ட திட்டத்தைப் பொறுத்தவரை இயலாத ஒன்று... :// அட, வாங்க முடியிதா இல்லியான்னு பெறவு பாப்போமுங்க. மொதல்ல நீங்க அது யாருன்னு சொல்லிப் போடுங்க. //எனக்கு எங்கய்யா தர்றேன்னு சொன்னாரு? // அப்படி அர்த்தத்துல சொல்லலீங்க. உங்ககிட்ட தர்றதாகவும், அமெரிக்காவுல உங்க பேங்க்ல போடச் சொன்னதாகவும் நீங்க சொன்னதைத்தானுங்க, இந்தக் கத்துக் குட்டி அப்படி எழுதிப் போட்டேன். //4000 தமிழ்ப் பிள்ளைகள் இலவசமாப் படிக்கிறதுக்கு பள்ளிக்கூடம் கட்டிட்டிருக்கேன்.// இலவசம் ரொம்ப நல்லதுங்க. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை நீங்க செய்யிறதாலதானுங்க அரசாங்கத்துக் காசை அரசியல்வாதிங்க சுருட்டுறாங்க. ஏனுங்க அரசியல்வாதிங்க ஒழுங்கா அரசாங்கத்தை நடத்துனா, பள்ளிக்கூடம் கட்டினா, நீங்க ஏனுங்க பள்ளிக்கூடம் கட்டோணும், அதுக்கு நான் ஏனுங்கோ பணம் கொடுக்கோனும்? நீங்களும், என்.ஜி.ஓக்களும் சேர்ந்து போடுற பிச்சையாலதானுங்க நாடே இலவசம் இலவசம்னு குட்டிச் சுவராப் போவுதுங்க. //உடனே எனக்கு நம்பர் அனுப்பவும்.// ஏனுங்க, மொதோ ஒங்க பிரெண்டு கேட்டாரு, இப்பொ நீங்க கேக்றீங்க. எழுத்து எழுத்தோட இருக்கணும். என்னத்துக்குங்க பேச்சு?
Any financial wrongdoing done by any national can be taken in US courts as long as the person involved resides in US. This particular issue can be brought up to V&AC or the Revenue/Income Tax Department by anybody in Tamilnadu. In that case, the Govt of India can mandate the hearing of Seemachu according to applicable international financial laws irrespective of his citizenship.
ஊழலை எதிர்த்து வேங்கையாய்ச் சீறும் சீமாச்சு அண்ணாவின் பெட்டகத்திலிருந்து: //85. நாம இந்த யோசனை சொன்னா விகடன் கேக்குமா? http://seemachu.blogspot.com/2009/07/85.html
இந்த மினிஸ்டர் ராஜா கூட பெரிய்ய ரோதனையாப் போச்சி.. அந்த ஆளூ எல்லா ஊழலும பண்ணுவாராம் ஆனால் அதை விகடன் மாதிரி பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாதாம்.
நியாயமான ஆளா இருந்தால் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டையும் நியாயமான முறையில் எதிர்த்து வெளியில வரணும். அப்படியில்லியா, பொது எம்.பி பதவியையே ராஜினாமா பண்ணிட்டு குடும்பத்தோட எங்கியாவது போய் செட்டிலாயிடணும். ரெண்டும் இல்லாமல் கோர்ட்டுக்குப் போயி “என்னக் கிள்ளீட்டான் சார்...” ரேஞ்சுக்குப் போயி தடை வாங்கறது அழுகுணி ஆட்டம். இதெல்லாம் ஒரு delay tactics தான். எப்படியும் தீர்ப்பு வர ஒரு ஆறு மாசமாச்சும் நிச்சயமா ஆகும். அது வரைக்கும் விகடன் வாயைக் கட்டி வெச்ச மாதிரி ஆச்சி. அப்படியே தீர்ப்பு பாதகமா வந்தால் மேல் முறையீடு இருக்கவே இருக்கு... ஒரு 5 வருஷம் இப்படி ஓட்ட முடியாதா என்ன?
இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளை விகடன் தோலுரிப்பதை ஒரு சராசரி பொதுஜனமாக நான் வரவேற்கிறேன்..
இராஜா இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால், சட்டத்துக்கும் நீதிக்கும் பங்கம் வராமல் விகடன் அதை எப்ப்டி எதிர் கொண்டு ராஜா பற்றிய ஊழல்களைப் தொடர்ந்து மக்களுக்குத் தருவது? அதுக்குத் தான் இந்த ஐடியா !!// அண்ணா, இப்பிடி விழுந்து விழுந்து எழுதுனீங்களே. இப்போ சொல்லுங்கோ நீங்களும் ராஜா மாதிரி ஒரு ஆளுக்குக் கையாளா?
//தம்பி! நீங்க பதிவு எழுத வந்து 2 மாசம் கூட முடியலை. அவரு 6,7 வருஷ சீனியர்.//
பிரசின்னையை கொஞ்சம் திசை திருப்புவோம்.. இந்த ஓசில கிடைக்கிற பிளாக 5 வருஷம் முன்னாடி ஆர்மபிச்ச ஒரே காரணத்துக்காக அவங்க சீனியரா? இப்ப வந்தவங்க அவஙக்ளுக்கு அடங்கி போகனும்னு சொல்றீங்களா????????????
இப்படிக்கு,
2008ல் பிளாக் ஆரம்பித்த ஓரளவுக்கு சீனியர்
//அண்ணா, இப்பிடி விழுந்து விழுந்து எழுதுனீங்களே. இப்போ சொல்லுங்கோ நீங்களும் ராஜா மாதிரி ஒரு ஆளுக்குக் கையாளா?//
அக்கினிச்சித்தன், நான் எந்த அரசியல்வாதிக்க்கும் கையாள் இல்லை.. கவலைப்படவேண்டாம். உங்களைப் போல நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக் குடிமகன்..
உங்க ஊர்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியோ..?
thambi ipa enna pannumkura.
//நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக் குடிமகன்.//
அப்படியென்றால் சீமாச்சு அண்ணா, அந்த அரசியல்வாதி யார், அவர் எவ்வளவு பணத்தை வங்கியில் வைக்கச் சொன்னார் என்ற அடையாளத்தை உலகறியச் சொல்லுங்கள். பிறகு நடப்பவை தன்னால் நடக்கும். ஒரு முதிய பதிவர், ஊழலை ஆதரிக்காதவர், நாட்டில் நல்லது நடக்க நினைப்பவர் என்று உங்களை இந்த வலைப்பதிவர் உலகம் போற்றும். இப்படி ஜகா வாங்குவது உங்களை 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்', வாய்ச்சொல் வீரர், ஊருக்குத்தான் உபதேசம் என்ற பல வரிசைகளில் வைக்கத் தூண்டும், இல்லீங்களா? வரிசை போனா போயிட்டுப் போவுதுனு சொல்விங்க. ஆனா பின்னாடி சட்டப்படி எதுனா ஆயிடுச்சுன்னா நீங்க நம்ம மேல வருத்தப்படக்குடாதுங்க.
//உங்க ஊர்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியோ..? //
ஏனுங்க, சூடு பார்ட்டின்னு படத்தைப் பார்த்தாலே தெரிலீங்களா? :)
ஒருவர் வெளியே சொல்லாதவை அனைத்தும் நிகழவில்லை என்று பொருள் இல்லை. அவர் வெளியே சொன்னார் என்பதற்காக அவரை பிடித்து இந்த வாங்கு வாங்கிறிங்களே.
உங்க கூற்றுப்படி புலனாய்வு பத்திரிக்கைகள் கிசு கிசு பாணியில் பெயர் போட்டும் தகவல்கள் யாவும் அவர்களுக்கு தெரியும், அவர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் கிரிமினல்கள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் இருக்கிறதே.
//thambi ipa enna pannumkura. //
ஏனுங்க பில்லைவால், தம்பி இப்ப என்ன பண்ணும்னு எங்கிட்ட கேட்டா நா என்னங்க சொல்றது?
//அவர் வெளியே சொன்னார் //
ஏனுங்க, அவர் எங்கேங்க சொன்னார்?
//உங்க கூற்றுப்படி புலனாய்வு பத்திரிக்கைகள் கிசு கிசு பாணியில் பெயர் போட்டும் தகவல்கள் யாவும் அவர்களுக்கு தெரியும், அவர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் கிரிமினல்கள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் இருக்கிறதே.//
ஏனுங்க, நீங்க இண்டியன் மெண்டாலிட்டியோட பேசுறீங்க. அங்கதானுங்க இதெல்லாம் சகஜம். இண்டு பேப்பரை விட்டு மத்த ஊரு உலகத்துப் பத்திரிகைகளையும் பாருங்க ஐயா! முட்டிக்கு முட்டியெல்லாம் தட்டவேண்டாமுங்க, தன்னால உண்மையைக் கக்க வெச்சுடுவானுங்க.
//அவரு 6,7 வருஷ சீனியர்//
கார்க்கி, பிளாக்குக்கு வந்து 3 மாசமா பாக்குறேனுங்க. இப்படித்தானுங்க ஒரு நெட்வர்க் பிளாகுல இருக்கு. அவிங்க பெரியவிங்க, இவிங்க சின்னவிங்கன்னு. ஒருத்தரைக் கேள்வி கேட்டா அல்லக்கை, அனானிமசு அல்லாரும் வருவாங்க. இந்த முதுகுசொறியும் கலாச்சாரம் ஒழியோனுமுங்க.
என்னங்க அக்கினி, எல்லாத்தையும் போட்டு சட்டுமேனிக்குத் தாளிச்சுக்கிட்டு இருக்கீங்க, பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பு! ஆட்டோ வந்துடபோவுது!
||Seemachu said...
//அண்ணா, இப்பிடி விழுந்து விழுந்து எழுதுனீங்களே. இப்போ சொல்லுங்கோ நீங்களும் ராஜா மாதிரி ஒரு ஆளுக்குக் கையாளா?//
அக்கினிச்சித்தன், நான் எந்த அரசியல்வாதிக்க்கும் கையாள் இல்லை.. கவலைப்படவேண்டாம். உங்களைப் போல நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக் குடிமகன்..||
ஏனுங்க சீமாச்சு... அவங்கதான் சொல்லிட்டாய்ங்கல்ல.. எழுத்து எழுத்தாதான் இருக்கணுமின்னு... அதாவது... சும்மாவாச்சும் ஏதாவது எழுதி நியாயம் மட்டும் கேப்போம்.. அதுவும் எழுத்திலதான்... மத்தபடி ஒன்னியும் வெட்டிப் புடுங்க மாட்டோம்.. நீங்களும் எழுத்தில யாரு கிட்ட எவ்ளோ இருக்குன்னு குத்துமதிப்பாவாவது சொல்லிப்புடனும்... அப்புறம் அதுக்கு என்ன எல்லாம் செய்யலாமின்னு எழுத்தில ஐடியா கொடுப்பாய்ங்க... நீங்க அதுக்கு சபாஷ் சரியான ஐடியான்னு எழுத்தில இடுகை போடனும்.. அம்புட்டுத்தேன் மேட்டரு..
இத விட்டுப்புட்டு.. நல்லது பண்றேன்.. நாலு ரூபா கொடுக்க முடியுமான்னு எல்லாம் கேக்கப்டாது.. அது அரசாங்கத்தோட வேலை... நீங்க எழுத்தில மட்டும் சேவை செஞ்சிட்டு... நிம்மதியா சாப்ட்டு.. சமர்த்தா தூங்கணும் கேட்டியளா... அதுக்கும் இப்பூடி யாராவது கேள்வி கேப்பாங்க.. வந்து சிரத்தையா பதில் சொல்லுங்க.. அட்லீஸ்ட் புத்திசாலித்தனமா... நீ யாரோட கூலியாள்னாவது தாக்க தெரியணும் சீமாச்சு... இல்லைன்னா எப்டி பொழப்பு நடத்துறது..
அப்புறம் அவங்க உங்களுக்கெல்லாம் ஃபோன் நம்பர் தர மாட்டாங்க சீமாச்சு... உங்க கிட்ட பேசினதுக்கே.. இவங்கள மக்கள் கேள்வி கேப்பாய்ங்கல்ல... அக்கினிபுத்திரன் அவர்களை விசாரிக்க வேண்டும்.. சீமாச்சுவுக்குத் தெரிந்த பல ரகசியங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்ன்னு... ஹிஹி.. நாம உஷார் பார்ட்டி... உங்கள மாதிரி ஏதாவது சொல்லி மாட்டிப்போமா...
எழுத்தில மட்டும்... எல்லாம் கிழிப்போம்... எல்லாரையும் கிழிப்போம்..
அக்னி ரொம்ப தெளிவா இருக்கீங்க... நெருப்பு அணையாம அப்டியே இருங்க... சோளம் வெளையறப்போ சுட்டு திங்கலாம்.. ஏன்பா உங்க முதுக கொஞ்சம் கண்ணாடிய முன்னுக்கும் பின்னுக்கும் புடிச்சுக்கிட்டாவது பார்க்க கத்துக்கலாமே.. யாராவது நல்லது பண்றாங்கன்னா.. பாராட்ட தெரிய வேணாம்... அட்லீஸ்ட் தூற்றாம இருக்க கத்துக்குங்களேன்பா... தமிழன் முன்னேறுவான் கொஞ்சம்...
இப்படிக்கு
நாசமா போன தமிழச்சி..
ஏனுங்க பனங்காட்டான், நமக்கு இவிங்க ஆரு என்னான்னு தெரியாதுங்க. ஞாயமின்னு தோணுச்சுதுங்க, கேட்டுப்புட்டேன். ஆட்டோ வந்தா பாத்துப்போட வேண்டியதுதானுங்கோ!
ஏனுங் சார். சீமாச்சுவ அப்புறம் விசாரிக்கலாம். கேதன் தேசாய் கிட்ட புடிச்ச 1800 கோடி 18 கோடி ஆயிடுச்சி. தங்கமா எங்கன்றாங்க. புடிச்சதே இந்த கதி. இத கேட்ட்டுட்டு அப்புறம் சீமாச்சுவ கேக்கலாமே. எங்க ஒரு இடுகை போடுங்க பார்ப்போம். சி.பி.ஐயே பதில் சொல்லுன்னு.
ஏனுங்க கலகலபிரியா,
நீங்க சொல்லுறது எனக்குப் புரியுதுங்க. நியாயமாப் பேசுறீங்க. ஆனா, நாங்கேட்டதுல இருக்க ஞாயத்தை இல்லேங்கிறீங்களா, சொல்லிப்போடுங்க. நா ஏக்கெனமே சொல்லிப்போட்டேன், சீமாச்சு அண்ணாகிட்ட நமக்கு எந்த வாதும் இல்லீங்க. ஏனுங்கண்ணா இந்த மாதிரி சொல்லிருக்கீங்களே, என்னா வெளக்கமுன்னு கேக்குறேனுங்க. எனக்காகவா கேக்குறேன்? ஞாயத்துக்காக கேக்குறேன், மக்களுக்காகக் கேக்குரேனுங்க. தப்புங்களா? தப்பு செய்யிற அரசியல்வாதியை இப்பிடி மூடிப் பாதுகாக்கலாமுங்களா? இதே மாதிரி எல்லாரும் செய்யிறாங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தோமுன்னா ஆருங்க பூனக்கி மனி கட்டுறது? ஞாயஸ்தரு சீமாச்சு அண்ணாவே ஊழலைப் பத்தி விலாவாரியா எழுதிப்போட்டிருக்காருங்க, அவிங்களே இப்பிடி உம்மையை மறைக்கலாமுங்களா? அவிங்களைக் கேள்வி கேக்க நீ யாருடான்னு கேக்குறது ஞாயமில்லீங்க. இதே அக்கினி எத்தினியோ நல்லதுபொல்லாத்துக்குப் பணம் குடுத்தேனுங்க, ஆத்தா மேல சத்தியமுங்க. ஆனா இப்பிடி சுத்தி நின்னுபோட்டுக் குடுடான்னா, அக்கினி குடுக்கமாட்டானுங்க. மத்தவிங்க மாரி இல்லிங்க அக்கினி. வெளக்கும் அதேன், தீயும் அதானுங்க.
Cheap Publicity stunt.
||அக்கினிச் சித்தன் said...
ஏனுங்க கலகலபிரியா, ||
பதிலுக்கு ரொம்ப நன்றி அக்னிச்சித்தன்... முதல் பின்னூட்டம் போடுறப்பவே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்திச்சு.. புரியுமா.. இதனால ஏதாவது பலன் இருக்குமான்னு... ஹூம்.. விதி யார விட்டது...
நீங்க ரொம்ப புத்திசாலியா இருக்கீங்க அக்னிச்சித்தன்... அத மெச்சித் தட்டிக் கொடுக்கறதுக்கு நாலு பேரு இருக்காங்க.. ரொம்பப் பெரிய விஷயம்... ஊஹூம்.. உங்க புத்திசாலித்தனமான விவாதத்துக்கு என்னால பதிலே கொடுக்க முடியல போங்க.. சான்ஸே இல்ல.. ஒரே பதில்... வேற வேற பரிமாணம்.. அடிச்சு ஆடுங்க..
அறிவு அளவுக்கு அதிகமா இருக்கு.. ஆனா ஏதோ கம்மியா இருக்கு.. ம்ம்.. just grow up..of course.. it's not an overnight process.. take yer own time..
all da best..!
எழுத்து நடையப் பார்த்தா, நம்ம பங்காளி மாதரயே இருக்கு....குறும்பு நடையாவும் இருக்கு.... சீக்கிரத்துல, கண்டுபுடுச்சுருவேன்....இஃகிஃகி!!
விசாரிக்கப் போறவங்க யாருங்க? ஏங்க, அவங்க நேர்மையானவர்களாவும் கடமையுணர்வு உள்ளவங்களாவும் இருந்தா, அவர் மட்டும் அல்ல, யாருமே இலைமறை காயா எழுதத் தேவையே இருக்காது பாருங்க....
வாதத்தால வெட்டி மடக்கிப் பேசுறது சுலுவுங்க.... யதார்த்தத்தை வெட்டி முறிக்கிறது மிகக் கடினமுங்க... சகபதிவரை சுற்றி வளைக்கிறது நமக்கு வேண்டாமுங்க....
பங்காளி, நீங்களும் பின்னூட்டப் பெட்டிக்கு வாசக் கதவு வெச்சிப் பூட்டியே வெச்சிருக்கீங்க? அவ்வ்வ்.......
அல்லாத்துக்கும் சொல்லிக்கிறேனுங்க, வேற ஆருக்காவும் இல்லீங்க, எம் பங்காளி பழமைபேசி சொன்னத்துக்கப்புறம் இந்த வெட்டி வாதை விட்டுப் போடுறேனுங். அவிங்க, டே தம்பி தூக்குடான்னு சொன்னாங்கன்னா இந்தப் பதிவையே வேணும்னாலும் தூக்கிப்போடுறேனுங்கோ. தமிழு அல்லத்தையும் வாழத்தானுங்க வைக்கும், அடுத்தாளைக் கெடுக்காதுங். அக்கினியும் அப்பிடித்தானுங்.
வணக்கமுங்க பங்காளி! மிக்க மகிழ்ச்சி!! இடுகை எல்லாம் தூக்க வேண்டாமுங்க....இந்த வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி! அதைப் பாவிச்சு, எனக்குத் தெரிஞ்சதை உங்க அனுமதியோட பதிஞ்சுகிறேன்!!
சீமாச்சு என்கிற பதிவர் எனக்குப் பதிவுலகம் மூலமாக அறிமுகமாகி, பல ஆண்டுகளாகப் பழகியவர் போல ஆனவர். அணுகுவதற்கு மிகவும் எளிமையானவர். பிறப்பால் இன்ன சாதி என்று மற்றவரால் அடையாளம் காணப்பட்டாலும், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஒரு கை தனக்கும், மற்றொரு கை சமூகத்திற்குமாகத்தான் படைக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பின்பற்றி ஒழுகுபவர்.
அவருடைய வாழ்க்கையை ஒரு தொடர்கதையாக, வாய்ப்புக் கிடைக்கும் போது எழுதலாம் என்று இருக்கிறேன்... பொருள் பொதிந்த, அர்ப்பணிப்பு நிகழ்வுகள் நிறைய அவரிடத்தே அண்டிக் கிடப்பதால், அது மற்றவர்க்கு ஒரு ஊக்கமாக அமைய வாய்ப்பு இருக்கிறது என்பது எம் பணிவார்ந்த எண்ணம்.
அவரிடத்தில் எனக்குப் பிடித்ததே, மற்றவர்களது எண்ணங்களுக்கு அவர் அளிக்கும் மரியாதை மற்றும் மதிப்பு. என்னை ஒருநாளும் அவர் கடிந்து கொண்டதில்லை. அதே போல நீங்களும் எனது கருத்துக்கு மதிப்பளித்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது; நன்றி!
இதை தான் சொன்னேன் அக்கினி சித்தரே! பதிவை எல்லாம் தூக்க வேண்டாம். பழமைபேசி சொன்ன மாதிரி சீமாச்சு அண்ணாவை பற்றி ஒரு புத்தகமே போடலாம்ப்பா. அவரை நான் பதிவுலக சீனியர் அதற்காக கேள்வி எல்லாம் கேட்க கூடாதுன்னு சொல்வதாக தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஆனா நல்லா நினைச்சு பாருங்க. இங்க இந்த பதிவுலகத்திலே சீமாச்சு அண்ணனை பிடித்த நபர்களை விட கமலஹாசனை பிடித்தவர்களே அதிகம். ஆனாலும் உங்க கமல் பதிவு படிக்கப்பட்டதை விட இந்த பதிவு உங்களை எங்கயோ கொண்டு போய் விட்டதுக்கு காரணம் சீமாச்சு அண்ணன் மேலே கூட யாராவது இப்படி சொல்ல முடியுமா என்கிற ஆச்சர்யம் தான். இந்த கை கொடுப்பது அந்த கைக்கு தெரிய கூடாது என்று சொல்லுவாங்க. அப்படி நடந்துகிட்டும் வெளியே தெரிந்து விட்டது அதாவது அவரால் கல்வி கண் அடைந்தவர்கள் வெளியே சொன்ன வரைக்குமே கோடியை தாண்டும்.
உங்க புரிதலுக்கு மிக்க நன்றி!
visarika mutiyadhu enna pannuva
சொன்னா என்ன பண்ணுவீங்க, என்ன பண்ணுவீங்கன்னு மட்டும் ஒரு அட்டவணைதாங்களேன். அது திமுக அரசியல்வாதின்னா அடிவாங்கத் தயாரா? மொதல்ல உங்க பேரைச் சொல்லுங்க.. அவுங்க அவுங்க முதுகு தெரியாதோ?
நமக்குத் தெரிந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளை நாம் கண்டுகொள்ளாமல் விடுகிறோம் அல்லவா அது போல. நமக்குத்தெரிந்த பதிவர் அவருக்குத்தெரிந்த அரசியல்வாதியை கண்டுகொள்ளாமல் விடுவதையும் கண்டுகொள்ளாமல் விடுவதே மூத்தபதிவராய் ஒருவர் அடையும் பரிணாமவளர்ச்சி!
அவ்வளர்ச்சி உங்களுக்கும் சித்திப்பதாக!
//உங்களை எங்கயோ கொண்டு போய் விட்டதுக்கு காரணம்//
ஏனுங்க, இப்பிடியெல்லாங்கூடக் கணக்குப் பாப்பீங்களா? அடப்பாவமே, உங்களுக்கெல்லாம் ஏதோ கவுண்டோபிலியா சீக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேனுங்க. இந்த ப்ளாக்குல இரிக்கவிங்களுக்கெல்லாம் இந்த வியாதி இருக்கும் போலருக்குங்கோ. பாவமுங்க நீங்க. ஒரு நல்ல டாக்குட்டரைப் பாருங்க, புள்ளக்குட்டிக் காரங்க நீங்க.
//சொன்னா என்ன பண்ணுவீங்க, என்ன பண்ணுவீங்கன்னு மட்டும் ஒரு அட்டவணைதாங்களேன். அது திமுக அரசியல்வாதின்னா அடிவாங்கத் தயாரா? மொதல்ல உங்க பேரைச் சொல்லுங்க..//
ஏனுங்க பக்கத்தூரு டிராக்டரு வண்டிக்காரங்களே, நெம்ப எகிறாதீங்கோ, சொல்லிப்போட்டேன். ஏதோ பழமைபேசி பங்காளி சொல்லிப்போட்டாரேன்னு பாக்குறேனுங்க. அல்லாங்காட்டி, எவனாயிருந்தாலும் பாக்கமாட்டேனுங்க. சவாலு வேணா வச்சிக்கலாமுங்களா? நீங்களா, நானா, சீமாச்சு அண்ணாவான்னு பாத்திப்புடலாமுங்களா? அரைகுறை இங்கிலீசுல கொக்கரிக்கிறவுங்களே, உங்களுக்குந்தானுங்க, வேணுமின்னா சொல்லுங்க, போட்டுப் பாத்துப்போடுவோம். அக்கினி பாவம்தான் பாக்குமுங்கோ, அஞ்சாதுங்கோ.
Post a Comment