Friday, March 19, 2010

அமேரிக்காவில் நான் ஆசிய இந்தியனா, தமிழனா?

இப்ப அமேரிக்காவுல சென்சஸ் எடுக்குறாங்க. சென்சஸ் 2010ன்னு ஒரே அமளிங்க. எல்லா வீட்டுக்கும் ஒரு தபால் அனுப்பியிருக்காங்க. அதில் இருக்க விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு, ஏப்ரல் முதல் தேதிக்குள்ள எல்லாரும் அனுப்பனுமாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வச்சுத்தான் அரசாங்கம் நலத்திட்டம் எல்லாம் தீட்டுமாம்.

அதுமட்டும் இல்லங்க, இதை எல்லா விசா பிரிவுக் காரங்களும் அனுப்பனுமாம். நீங்க நிரந்தர வசிப்புரிமை அல்லது குடியுரிமை வச்சிருக்காட்டியும் அனுப்பலாமாம். அதனால எல்லாரும் அனுப்புங்க, சரிங்களா?

அதுல பாருங்க ஒரு கேள்வி கேட்டிருக்காங்க. உங்க இனம் என்ன? இந்தியாவுல நாம எல்லா இனத்துக்காரங்களும் ஒக்கப் போட்டு ஆக்கி, தாயா புள்ளையா இருந்தாலும் (ஹி ஹி சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன்), துளு ஒரு இனம், காஷ்மீரி ஒரு இனம், மணிப்பூரி ஒரு இனம், தமிழ் ஒரு இனம் இல்லீங்களா? ஒரு இனம்னா அதுக்கு ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், அதுக்குன்னு ஒரு சில அடையாளங்கள் இருக்குதுங்க. அதெல்லாம் இருக்க எல்லாமே இனம்தானுங்களே. அதுனாலதான் தமிழ் ஒரு இனமுங்க. இந்தியா ஒரு பல்லின நாடுங்க. அதாவது அமெரிக்கா மாதிரி ஒரு multi-ethnic country. சரிங்களா? அதனாலதான் குடியுரிமை வகையில நான் ஒரு இந்தியனுங்க. ஆனா இனம் என்னன்னு கேட்டீங்கன்னா, நான் இந்தியன் இல்லீங்க, தமிழனுங்க. ஏன்னா இந்தியன் அப்படின்னு ஒரு இனம் இல்லீங்க. நீங்க அமெரிக்கன் அப்படின்னு ஒரு இனம்னு சொல்லிப் பாருங்க, சிரிப்பா இருக்கும். அமெரிக்காவுல அப்படி யாரும் சொல்றது இல்லீங்க. ஏன்னா அமெரிக்காவுல வெள்ளை இனம், கறுப்பர் இனம், செவ்விந்தியர் இனம் இப்படித்தானுங்க பிரிச்சிருக்காங்க. அதுனாலதான் நான் இந்தியன் அப்படின்னு போடுறது அருத்தமா இருக்காதுங்க. அப்ப நான் தமிழ் (Tamil) அப்படின்னுதான் போட்டிருக்கேனுங்க. நீங்களும் அப்படியே போடுங்க. அப்பத்தான் நாளைக்கு அமேரிக்காவுல தமிழுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். சரிங்க, இப்ப படத்தைப் பாத்துப் போட்டு, அதே மாதிரி ரொப்பிப் போடுங்க.


6 comments:

ராஜ நடராஜன் said...

சித்து வேலைகள் இப்பத்தான் துவக்கமா:)நான் என்னமோ தாடி வச்ச சித்தரோன்னு நினச்சேன்!

அக்கினிச் சித்தன் said...

தாடிதான் சித்தருக்குத் தகுதின்னா அதுவும் இருக்கே! :))

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'நல்ல பதிவு தோழரே... சரளமான எழுத்து நடை. இப்போதுதான் உங்கள் வலைத் தளத்தை தொடங்கி இருக்கிங்கன்னு நினைக்கிறேன். தட்டு தடுமாறி நடக்காமல், தாண்டி குதிக்கிறிங்க. அருமை. பதிவுகள் தொடர வாழ்த்துகள்.'

குலவுசனப்பிரியன் said...

நல்லா சொன்னிங்க. அப்படியே செய்து விடுவோம்.

பழமைபேசி said...

படிவம், தமிழ்லயே இருக்குங்க!

Jerry Eshananda said...

தமிழன் என்றொரு இனமுண்டு,இந்தியன் என்ற இனமில்லை.சரிதான்.

Post a Comment