Thursday, March 4, 2010

கேட்டானே ஒரு கேள்வி!

எங்க ஊருக்கு ஒரு பையன் புதுசா வந்தான். பொதுவா, புதுசா வந்த பசங்கன்னாலே, அதுவும் கொஞ்சம் சின்னப் பசங்கன்னாலே, ரொம்ம்ம்ம்பப் பேசுவானுங்க. மேல போற ஏரோப்ளேனைப் பாத்து, இது F26ன்னு ஆரம்பிச்சு, மெர்சிடஸ்ஸுல இந்த வண்டிக்கு இத்தனை சிலிண்டருன்னு போட்டு, கூடவே நம்மளை நாலு கேள்வியும் கேட்டு கண்ணுல விரலை விட்டு ஆட்டுவானுங்க. ஆனா இந்தப் பையன் அவங்களை மாதிரியெல்லாம் இல்லாம ரொம்ப அமைதியா இருக்கான். அடேய் பேசுடான்னு போட்டு உலுப்புனாலும் பேசமாட்டேங்கறான். இந்த ஊருல பேசலைன்னா பொழைக்க முடியாதே. எப்புடியாச்சும் பேச வைப்போமுன்னு நான் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் அவன் வாயைப் புடுங்குறது உண்டு. ஒரு நாள் அவனிடம் கேட்டேன், "தம்பி, வாழ்க்கையில ஒனக்கு முக்கியமானது எது?" என்னதான் சொல்லுறான்னு பாப்பமேன்னு நானும் இதைச் சொல்லுவானா, அதைச் சொல்லுவானான்னு பாத்துக்கிட்டேயிருந்தேன். ஆனா பையன் நம்மகிட்ட ஒரு எதிர்க்கேள்வி கேட்டான் பாருங்க, "இப்ப எங்கிட்ட இருக்கதா இல்லாததா?"
பளிச்! ஞான் அரண்டு போயி.
பய பொழச்சுக்குவான்!

2 comments:

ராஜ நடராஜன் said...

//மேல போற ஏரோப்ளேனைப் பாத்து, இது F26ன்னு ஆரம்பிச்சு, மெர்சிடஸ்ஸுல இந்த வண்டிக்கு இத்தனை சிலிண்டருன்னு போட்டு, கூடவே நம்மளை நாலு கேள்வியும் கேட்டு கண்ணுல விரலை விட்டு ஆட்டுவானுங்க. //

F16 இப்ப 26 ஆயிடுச்சா?மெர்சிடிசுக்கு இப்பவும் அதே அஞ்சுதானா இல்ல அதுவும் எகிறிடுச்சா?

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, ஆறு சிலிண்டர் எட்டு சிலிண்டர்னு எல்லாம் கேள்விப் பட்டிருக்கேனே! ஏதோ நம்மகிட்ட இருக்கதெல்லாம் 4 சிலிண்டர்தானுங்க. அடுத்ததா ஒரு கேஸ் சிலிண்டர்தான் வாங்கோணும் :))

Post a Comment