Thursday, March 4, 2010

அக்கினி எழு(து)கிறது

அக்கினி தகிப்பது. ஆக்குவது. அழிப்பது. குளிரின் சவத்தன்மையை விரட்டுவது. நாளங்களில் பாய்வது. நரம்புகளில் உயிர்ப்பாயிருப்பது. உயிர்களில் உவப்பாயிருப்பது. அக்கினியோடு கலக்கும் யாவும் அக்கினியின் தன்மையதாகின்றன. அக்கினியால் ஒளி பெறுகிறோம். அக்கினியால் வனப்பெய்துகிறோம். அக்கினியால் அழகினைக் கண்ணுறுகிறோம். அக்கினி ஏறிவரும் குதிரைகள் விரைவானவை. அது பயணிக்கும் யானைகள் வலிமையானவை.

இங்கு ஒரு அக்கினி எழுகிறது. செயல்கள் அக்கினியால் பிறக்கின்றன. எழுத்தும் அக்கினியாலேயே பிறக்கிறது. ஆன்மாக்கினி. அகக்கினி. உள்ளே கனன்றுகொண்டிருக்கும் சூட்டில் எழுத்துக்கள் பிறக்கின்றன. விரல்களின் சூட்டோடு இசைந்துகொள்ளும் எழுத்துக்களுக்கு வடிவம் பிறக்கிறது. அக்கினியில்லாதது எது? எதுவுமில்லை. குளிரும் அக்கினிதான். குறைந்த அக்கினி. உறங்கும் அக்கினி. அக்கினியோடு தொடர்புகொண்டிராத அக்கினி. ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அக்கினித் தன்மை உள்ளகமாயிருக்கிறது. மற்றொரு அக்கினியோடு தொடர்புகொண்டதும் இதன் அக்கினித் தன்மை உயிர்ப்பெய்துகிறது. அக்கினிகளில் பெரியார் சிறியார் இல்லை. ஏனென்றால் எல்லா அக்கினிகளும் ஒரு பயணத்தில் தாம் இருப்பதை உணர்ந்திருக்கின்றன. சிறியது பெரிதாகலாம். எதுவேண்டுமானாலும் அவிந்துபோகலாம். எனவே ஒன்று இன்னொன்றை எள்ளுவதில்லை.

இனி அக்கினி எழுதும்.

5 comments:

Cable சங்கர் said...

அக்னி சித்தன்.. பதிவுலகம் உங்களை வருக.. வருகவென வரவேற்கிறது..வாழ்த்துகள்.

அக்கினிச் சித்தன் said...

அட! நமக்குக்கூட மறுமொழி போட ஆளிருக்கப்பா! நன்றி கேபிள்!

ராஜ நடராஜன் said...

//அட! நமக்குக்கூட மறுமொழி போட ஆளிருக்கப்பா! நன்றி கேபிள்!//

அதெல்லாம் ஒரு பெரிய கலைங்க!இதுல பழம் தின்னு கொட்டையையும் முழுங்குன ஆட்கள் நிறைய இருக்கிறாங்க.இல்ல இப்ப நீங்க நம்ம கடைக்கு வந்த மாதிரி கடை கடையா மெதுவா ஏறி இறங்கினாலும் சில பேர் வந்து போவாங்க.இல்ல தடாலடி வேணுமுன்னா அதான் அக்கினி வச்சிருக்கீங்களே!ஜமாய்ங்க!வாழ்த்துக்கள்.

அக்கினிச் சித்தன் said...

ரொம்ப நன்றிங்க ராஜ! சொல்லிட்டீங்கள்ல. கெளப்பிருவோம் விடுங்க!
நானும் தமிழ்மணத்துல சேரணும்னு எழுதிப் போட்டிருக்கேன். சேத்துக்குவாங்கல்ல?

mohamedali jinnah said...

நல்லாத்தான் இருக்கு படிக்க . ``அக்கினி`` பயமா இருக்கு.

Post a Comment